உத்தரப்பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உயரமான மேம்பாலத்தில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில், அவர் தரையில் விழாமல், தூண்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டார். இதனையடுத்து, அஅங்கிருந்தவர்கள் உதவியோடு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர்.