அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குவாட் உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றாா். மாநாட்டின் ஒரு பகுதியாக தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லே நகரிலுள்ள ஜோ பைடன் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இதுகுறித்து பேசிய, பிரதமர் மோடி, இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார். இதற்காக Long Island பகுதியில் உள்ள அரங்கில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.