கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தேனி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் எல்லைப்பகுதிகளில் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்க்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தேனி அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.