வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
Jul 19, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Sep 22, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடர்ந்து, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அஸ்வினும், ஜடேஜாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களையும், ஜடேஜா 86 ரன்களையும் குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் எடுத்த போது  2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.

இந்திய வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 82 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags: IndiaBangladeshChepauk StadiumIndia won by 280 runsashwin
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நாடகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!

Next Post

திருச்சியில் சத்துணவு முட்டைகள்  விற்கப்பட்ட ஹோட்டலுக்கு சீல் வைப்பு – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

Related News

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies