திருச்சியில் சத்துணவு முட்டைகள் விற்கப்பட்ட ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
எடமலைப்பட்டியை சேர்ந்தவர் ரகுராம். சத்துணவு அமைப்பாளரான ரகுராம் மனைவி சத்துணவு முட்டைகளை வீட்டில் வைத்து அதன் மீது உள்ள அரசு முத்திரைகளை அகற்றிவிட்டு புதூரில் உள்ள ஹோட்டலுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதனையறிந்து அங்கு சென்ற அதிகாரிகள், ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.
மேலும் வீட்டில் இருந்த முட்டைகளையும் கைப்பற்றினர். கடந்த வாரம் துறையூரில் உள்ள ஹோட்டலில் சத்துணவு முட்டைகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.