தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஏ.புதுக்கோட்டை – கும்பக்கரை சாலையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு சுற்றித்திரிந்த இரு இளைஞர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 40 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.