கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ அவரைக்காய் 40 முதல் 50 ரூபாய் விற்பனையான நிலையில் இன்று 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கத்திரிக்காய் 40 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பாகற்காய் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டு இருப்பதால் இந்த திடீர் விலை சரிவு ஏற்பட்டு இருப்பதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.