சென்னையில் பிரபல ரவுடி சிடி மணியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப்படும் நபராக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிடி மணியை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைதான ரவுடி சிடி மணி மீது ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.