திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைக் கெடுக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சதி செய்வதாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், சந்திரபாபு நாயுடு, தனது அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் அளவுக்கு தரம்தாழ்ந்த செயலில் ஈடுபட்டதாக ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.
பொய் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு அறிவுறுத்த வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அப்போதுதான் கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் எழுந்த சந்தேகம் தீர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம் மீட்டெடுக்கப்படும் என்றும், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.