ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளன.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்றது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் 193 அணிகள் பங்கேற்றன. இந்திய ஆடவர் அணி தொடர்ச்சியாக 8 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 9 சுற்று டிராவில் முடிந்தது. தொடர்ந்து 10 சுற்றிலும் வெற்றிப்பெற்று இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய அணி சமன் செய்த நிலையில், புள்ளிகள் அடிப்படையில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.