இலங்கையின் புதிய அதிபராக அனுரா திசநாயகே இன்று பதவி ஏற்றார்.
இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுர குமார திசநாயகே 39 புள்ளி 52 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார்.
இதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாச 34 புள்ளி 28 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ஆட்சியமைக்க எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 2-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையின் 9வது அதிபராக னுரா குமார திசநாயகே இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.