மயிலாடுதுறையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுமென ஆட்சியர் மகாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், படகுகள், வலைகள் பறிமுதல் செய்து மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.