திருப்பதி லட்டு விவகாரத்தைக் கண்டித்து ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு, பாஜகவின் ,இளைஞர் அணியினர் (யுவமோச்சா) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி கோவிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை தயார் செய்ய, விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜயவாடா அருகே தாடேபள்ளியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜகவின் இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான சுப்பா ரெட்டிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.