காரைக்காலில் இளம்ஜோடியை மிரட்டிப் பணம் பறித்த காவலர் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த ராஜ்குமார் என்ற காவலர், ஜோடியை வரவழைத்து மிரட்டி 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் காவலர் தவறாக நடந்துகொள்ள முயன்றாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், காவலர் ராஜ்குமாரை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.