பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் - குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!
Jun 14, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாளையங்கோட்டை அருகே சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் – குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எல்.முருகன்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார்.

பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் வசித்து வரும் சுந்தர் என்பவரின் மகன் ஆன்மீக சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு தியாகராஜ நகரில் உள்ள தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை தடுத்து நிறுத்தி, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்துள்ளனர். மேலும், இதுபோல பூணூல் அணிந்து வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாநகராட்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமிற்காக வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பாதிக்கப்பட்ட இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நெல்லையில், பிராமண சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்டதுதான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார். பூணூல் அறுப்பு விவகாரத்தில் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். த

தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத கும்பல் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வருவதாக சாடியுள்ளார். மேலும், இத்தகைய சமூக விரோத செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து சடத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Nellaiminister l murugannellai poonuool issueThyagaraja Nagar
ShareTweetSendShare
Previous Post

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் பிரதமர் மோடி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Next Post

காரைக்காலில் இளம்ஜோடியை மிரட்டிப் பணம் பறித்த காவலர் ஆயுதப் படைக்கு இடமாற்றம்!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies