ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, கும்பகோணத்தில் நடைபெற்ற இந்து மகாசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கும்பகோணத்தில் இந்து மகாசபா சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அரசு நிலம் வழங்கிட வேண்டும், மணிமண்டபம் கட்ட குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.