தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீர் என்ற அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக சென்னையில் 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏழு கிணறு, ராயப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெட்டுவாங்கனி உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இளங்கடை, தெற்கு புதுத்தெருவில் வசித்து வரும் முகமது அலி என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை நடந்து வருகிறது. முன்னதாக என்ஐஏ அதிகாரிகள் முகமது அலியின் வீட்டின் இருப்பிடத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேடி அலைந்துள்ளனர்.