ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூரில் உள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது, தமிழக மக்கள் மீது பிரதமர் கொண்டிருக்கும் ஆழமான அன்பின் உண்மை சான்றுகள் என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த முன்முயற்சிகள், நமது வளமான தமிழ் பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத ஞானத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு இந்தியரையும் பெருமைமிக்க பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாலமாக செயல்படுவதாக தெரிவித்த ஆளுநர், தமிழ் கலாசாரத்தின் அழகையும் துடிப்பையும் உலகம் முழுவதும் பரப்பும் பிரதமரின் முயற்சிகளுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையை நிறுவிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றியையும் ஆர்.என்ரவி தெரிவித்துள்ளார்.