உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வீடு ஒன்றில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அங்கிருந்த 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள், 10 துப்பாக்கிகள், 30 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
கைதான 10 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.