தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக நகர செயலாளரான பிச்சைக்கனி என்பவரது இல்லம், குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் பிச்சைக்கனியின் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதனால் அதிச்சியடைந்த வீட்டின் காவலாளி பற்றி எரிந்த தீயை அணைத்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பெட்ரோல் குண்டுவீச்சில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.