பரிசு பொருள் பெற்ற வழக்கில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சரும் இந்திய வம்சாவளியுமான ஈஸ்வரனை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈஸ்வரன் தனது பதவிக்காலத்தில் 4 லட்சத்து 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பரிசுபொருள் பெற்றதாகவும், வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈஸ்வரனுக்கு அதிகபட்சம் 7 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. சிங்கப்பூரில் கடந்த அரை நூற்றாண்டில் அமைச்சர் ஒருவர் ஊழல் புகாரில் சிக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.