அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த நிலையில், அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை தரப்போகிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை தரப்போகிறது என்றும், அமைச்சரவை மாற்றம் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் அமையப்போகிறது என தெரிவித்தார.
தி.மு.க.,வில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா? எனறு அவர் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும், அப்பட்டமான அரசியல் செய்வதாக தமிழிசை குற்றச்சாட்டினார்.