புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் ஓய்வறையில் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் ஏராளமான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். புதுச்சேரி முழுவதும் தற்போது டெங்கு, இன்புளூயன்சா போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் ஓய்வறையில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பல மணி நேரம் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் மருத்துவர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்த்திருந்த வேளையில் பணி முடிந்ததாக கூறி கிளம்பிச் சென்றனர்.
இந்த அவல நிலையை வீடியோவாக பதிவு செய்த நோயாளி ஒருவர் இணையத்தில் பதிவு செய்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.