ராமநாதபுரத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்ட பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது உச்சிபுளி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் ரயிலில் ஏறியுள்ளார்.
பின்னர் மீண்டும் இறங்கிவிட்டு ஏற முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். ரயில் புறப்பட்ட நிலையில், ஆபத்தான முறையில் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த மாரிமுத்துவை அங்கு பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.