திமுக ஆட்சிக்கு வந்தால் மாநகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அனைத்தையும் தனியார் மயமாக்குவதாக சிஐடியு பொதுச்செயலாளர் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் உள்ள 4,5,6,8 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுப்பதை கைவிட கோரி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சிஐடியு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.