விழுப்புரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.