திருச்சியில் காவிரி பாலம் அருகே உள்ள கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு
ஆற்றில் கலந்து வருகிறது.
ஸ்ரீரங்கம் – மாம்பழச்சாலை அருகே செல்லும் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.