திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மாவடிகுளத்தை தூர்வாரி உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரி குளத்தில் இறங்கி சாமானிய மக்கள் நல கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்மலை பகுதியில் 147 ஏக்கரில் அமைந்துள்ள மாவடிகுளத்தில் தண்ணீர் திறந்து விட கோரியும், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குளத்தை தூர்வாரி உடனடியாக தண்ணீர் விட கோரி சாமானிய மக்கள் நலக் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் குளத்தில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் இரு தினங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர்.