விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு பகுதியில் பற்றிய நெருப்பு காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவியதால் மலையின் பல்வேறு பகுதிகள் தீக்கிரையாகின.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கடும் புகைமூட்டமாக காட்சியளித்தது.