தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நிருபர் எனக்கூறி போலி ஆடியோவை காட்டி மிரட்டி மருத்துவரிடம் பணம் கேட்டி மிரட்டிய 6 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தென்கரையை சேர்ந்த மருத்துவரான அனுமந்தன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவரை தொடர்புகொண்டு நிருபர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், அனுமந்தன் நடத்திவரும் கிளீனிக்கில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், தங்களிடம் இதுதொடர்பான ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டிய நபர்கள் இதைப்பற்றி வெளியில் தெரிவிக்காமல் இருக்க 25 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதுகுறித்து அனுமந்தன் புகாரளித்த நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் நிருபர்கள் என பொய்க்கூறி பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 6 பேரையும் தேடி வருகின்றனர்.