தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி – சாத்தூர் நெடுஞ்சாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா புகைப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருடன் சேர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.கைதானவர்களிடம் இருந்து ஆறரை கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.