சென்னை, தலைமை செயலகத்தில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதாளர்களுக்கு காசோலைகள், சான்றிதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
2023-24-ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு 6 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டித் தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.