ஈரோட்டில் சாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஏற்றும் வாகனத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வஉசி பூங்கா அருகே செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு, சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து லோடு ஏற்றும் வாகனம் மூலம் தக்காளி ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியே நடைபயிற்சி மேற்கொண்ட சிலர், லோடு ஏற்றும் வாகனத்தில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.