மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞான சம்பந்தர் பள்ளி மாணவர்கள் 42 பேர் பதக்கங்கள் வென்றனர்.
இதையடுத்து வெற்றிபெற்ற மாணவர்கள் இன்று தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.