நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிங்கம்பட்டி பகுதியில் உள்ள இந்திரா காலனியில் சுமார் 50 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சிங்கம்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.