கோயில்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டுமென விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியது.
டெல்லியில் விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிறுபான்மையின அமைப்புகளால் தங்களது வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்க முடியும்போது இந்துக்களால் ஏன் கோயில்களை கட்டுப்படுத்த முடியாது என கேள்வி எழுப்பினார்.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிப்பதில் உறுதியாக இருப்பதாக கூறிய சுரேந்திர ஜெயின், இதையொட்டி, நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநில ஆளுநர்களை சந்தித்து கோயில்களை மீட்கக் கோரி மனு கொடுக்க போவதாகவும், தேவைப்பட்டால், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.