திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தேவஸ்தானத்துக்கு நெய் விநியோகித்த நான்கு நிறுவனங்களின் எண்ணெய் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவன நெய் மாதிரி தரத்தில் சமரசம் செய்யப்பட்டது தெரியவந்ததால், அந்நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்தச் சூழலில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்காக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முன்னாள் ஆந்திர அரசு டெண்டர் விதிமுறைகளை தளர்த்தியது பூதாகரமாக வெடித்திருக்கிறது.
நெய் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 250 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அதை 150 கோடியாக ஜெகன் மோகன் ரெட்டி அரசு தளர்த்தியிருக்கிறது. அதாவது திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.244 கோடியாக இருந்ததால் டெண்டர் விதிமுறை தளர்த்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தரக் குறைவான நெய்யை அந்நிறுவனம் தேவஸ்தானத்துக்கு விநியோகித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.