தஞ்சாவூரில் செல்போன் பேசியபடி பணிபுரிந்த அதிகாரியை மேயர் கண்டித்த காட்சி வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியில் மேயர் ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் வந்த ராஜேஸ்வரி என்ற அதிகாரி செல்போன் பேசியபடி மேயர் பேசுவதை காதில் வாங்காமல் நின்றுகொண்டிருந்தார்.
இதைபார்த்த மேயர் ராமநாதன் உடனடியாக அவரது செல்போனை பிடுங்கி அவரது பாக்கெட்டில் வைத்தார். மேலும், பணியின் போது செல்போன் பேசக்கூடாது எனவும், பொதுமக்களின் பிரச்சனைகளை குறிப்பெடுக்க வேண்டும் எனவும் அதிகாரியை அவர் கண்டித்தார்.