கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சிமெண்ட் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேன்கனிக்கோட்டையில் இருந்து சிமெண்ட் கற்களை ஏற்றி கொண்டு அஞ்செட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி குந்தக்கோட்டை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் மீது அமர்ந்திருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லாரியை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், லாரி மீது மோதி படுகாயமடைந்தனர்.