உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை, மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், பூனா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 60 வகையான விதைகள் பெறப்பட்டது. அவைகள் பூங்காவிலேயே உற்பத்தி செய்தும், நடவு செய்தும், லட்சக்கணக்கான வண்ண மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
மேலும் கண்ணாடி மாளிகையின் முன்பு 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட சால்வியா, டெய்சி உள்ளிட்ட செடிகளில் வண்ண மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. அவை, 2-வது சீசனுக்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது.