திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்கியதாக ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கின் கொழுப்பு கலந்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் என தெரிய வந்ததையடுத்து, அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டது.
நிபந்தனைகளை மீறி விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் நெய் சப்ளை செய்ததாக ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது, தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொதுமேலாளர் முரளிகிருஷ்ணா, திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.