நீர்நிலைகள், பொது இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்துள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து அரசு நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாக ஒரு முறையான பதிவேட்டினை மாவட்ட ஆட்சியர்கள் பராமரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பதிவேடுகளில் நிலத்தின் சர்வே எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, பதிவேடு விவரங்களை நிலநிர்வாக ஆணையர் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.