செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.