முடா ஊழல் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (முடா) ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கர்நாடக லோக்ஆயுக்தாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய முதல்வர் சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
குற்றச்சாட்டுகள் நிவர்த்தியாகும் அவர் பதவியில் தொடரக்கூடாது என்றும், பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது என்றும் தாக்கூர் கூறினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு அமைந்தத முதல் அங்கு மீண்டும் மக்களை கொள்ளையடிக்கும் வேலை தொடங்கியுள்ளது என்பதையே இது காட்டுவதாகவும் தாக்கூர் விமர்சித்தார்.