கரூர் அருகே தனியார் காட்டன் ஆலையில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் கூலி வேலை செய்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளியணை அடுத்த தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் காட்டன் ஆலையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது பாஸ்போர்ட், விசா இல்லாமல் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் ஆலை நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.