புனே நகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் 86 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் அதீத கனமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனே சிவாஜி நகரில் சுமார் 133 மில்லி மீட்டர் மழை பெய்ததால் பல சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், புனே நகரில் நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மும்பையில் பெய்த கனமழை காரணமாக திறந்த வெளி வாய்க்காலில் மூழ்கி 45 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
மும்பையில் இடைவிடாத மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளம் நீர் சூழ்ந்தன. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன.
















