கோடநாடு எஸ்டேட்டில் தற்கொலை செய்துகொண்ட தினேஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கு விசாரணை கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் தற்கொலை செய்துகொண்ட தினேஷின் பெற்றோரிடம் டிஎஸ்பி அண்ணாதுரை விசாரணை மேற்கொண்டார். அப்போது தற்கொலை செய்துகொண்ட தினேஷின் செல்போன் உரையாடல்கள் குறித்தும், தற்போது அவரது செல்போன் எங்குள்ளது என்பது குறித்தும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.