ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Sep 20, 2026, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு  நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது போல் அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், நேற்று இரவு அனுமதி கோரிய மனுவை காவல்துறை நிராகரித்துள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

எத்தனை பேர் பங்கேற்பார்கள், யார் நடத்துகிறார்கள் என்ற விவரங்கள் இல்லை என காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அனுமதி வழங்க கூடாது என்பதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றும், கடந்த முறை தமிழகத்தில் 43 இடங்களில் ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், இந்த முறை 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவில் விதித்த நிபந்தனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்  என்றும்,  தொடங்கும் முடிவடையும் இடம், யார் பொறுப்பு போன்ற தகவல் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் அனுமதி கோரிய மனுவில் இல்லை என்றும்  இதனால் பாதுகாப்பு வழங்குவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அனுமதி ஒவ்வொரு வருடமும் அனுமதி மறுக்கப்படுகிறது என  ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

கூடுதல் விவரங்கள் வேண்டும் என்றால் அனுமதி கோரி மனு அளித்தவரிடமே அந்த தகவல்களை காவல்துறை பெற்றுக் கொள்ளாலேமே என கேள்வி எழுப்பிய  நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவில் தகவல்கள் இல்லை என்றால் மனு அளித்த நபரை வரவழைத்து என்ன பிரச்சனக்கள் உள்ளது என்பதை ஏன் காவல்துறை விளக்கவில்லை என்றும் வினவினார்.

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு  காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,விசாரணையை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: rss march casejudge jayachandranChennaichennai high courtRSSrss march
Share
Tweet
SendShare
Previous Post

கோடநாடு எஸ்டேட் வழக்கு – தினேஷ் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி – 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies