ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டன் ஹாரி புரூக் சதம் விளாச இங்கிலாந்து அணி 46 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது போட்டி செஸ்டர்-லி-ஸ்டிரீட்டில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 37 புள்ளி 4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நீடிக்க ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி வெற்றி பெற்ற அணி முடிவு செய்யப்பட்டது.
இதன்படி 37.4 ஓவரில், 209 ரன் எடுத்திருக்க வேண்டும். இங்கிலாந்து அணி, 254 ரன் எடுத்திருந்ததால், 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது..ஆஸ்திரேலிய அணி 2க்கு1 என முன்னிலையில் உள்ளது.