மலேசியாவில் நடைபெற உள்ள உலக சைவ நன்னெறி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரத யாத்திரையாக விமான நிலையம் நோக்கி புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் வரும் 28-ம் தேதி உலக சைவ நன்னெறி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடக்கி வைக்கிறார்.
இந்நிலையில், மலேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக சொக்கநாத பெருமான் சுவாமிகளுடன் விமான நிலையம் புறப்பட்ட தருமபுர ஆதீனத்திற்கு வழியெங்கும் பூரண கும்ப மரியாதையுடன் வழி அனுப்பு விழா அளிக்கப்பட்டது.